சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்!

‘ஸ்கெட்ச்’ சக்சஸ் மீட்டில் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்!

செய்திகள் 17-Jan-2018 1:07 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன், ஆர்.கே.சுரேஷ் முதலானோர் நடித்த ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் சென்ற 12-ஆம் தேதி வெளியானது. இப்படம் வெற்றிப் படமாக அமைந்ததை தொடர்ந்து இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரம் பேசும்போது,

‘‘இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரனம் இயக்குனர் விஜய்சந்தர் தான். அவர் கதை சொன்ன இருபது நிமிடத்தில் இந்த கதை மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதை நான் ஊர்ஜிதம் செய்தேன். விஜய்சந்தரை போல இந்த படத்தின் வெற்றிக்கு எஸ்.எஸ்.தமனின் இசையும் முக்கிய காரணம். அவர் உட்பட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்’’ என்று தெரிவித்த விக்ரம் இந்த படத்தில் என்னுடன் நடித்த சூரியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்!

சூரி குறித்து விக்ரம் பேசும்போது, ’’சூரியை வைத்து நிறைய காட்சிகளை எடுத்தோம். ஆனால் அதில் முக்கால் வாசி காட்சிகளையும் படத்தின் வேகத்திற்காக வெட்டி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு நான் தான் முழு காரணம். அதனால் சூரியிடம் மன்னிப்பு கேட்கிறேன். சூரி மிக சிறந்த நடிகர், நல்ல திறமைசாலி. அவரது நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் அருமையாக இருந்தது. அப்படி இருந்தும் அந்த காட்சிகளை படத்தில் சேர்க்க முடியவில்லை. அதில் எனக்கு ரொம்பவும் வருத்தம் தான். அதனால் நாங்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிப்போம், இது உறுதி‘’ என்றார் விக்ரம்.

#Vikram #Soori #Sketch #VijayChander #SSThaman #Tamannah #KalaipuliSThanu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;