விஜய் படத்தலைப்பில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

காஞ்சனா 3 படத்தைத் தொடர்ந்து லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 18-Jan-2018 4:06 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடம் வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களுமே வசூல்ரீதியாக பெரிதாகக் கை கொடுக்காத நிலையில், தற்போது உருவாகிவரும் ‘காஞ்சனா 3’ படத்தை ரொம்பவே நம்பியுள்ளார் ராகவா லாரன்ஸ். வேதிகா, ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய படமொன்றை எடுக்கவிருக்கிறார் லாரன்ஸ்.

மிக மிக பிரம்மாண்டமான முறையில் தயாராகவிருப்பதாக கூறப்படும் இப்படத்திற்கு விஜய் படத்தலைப்பான ‘பைரவா’வுடன் சேர்த்து, ‘கால பைரவா’ என்று பெயரிட்டுள்ளார் லாரன்ஸ். இப்படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Vijay #RaghavaLawrence #Bairavaa #KaalaBairavaa #Kanchana3 #Muni4 #Muni

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;