சித்தார்த், ஜெய்யைத் தொடர்ந்து சமுத்திரக்கனி!

பாரதிநாதனின் ‘தறியுடன்’ நாவல் ‘சங்கத்தலைவன்’ என்ற பெயரில் திரைப்படமாகிறது

செய்திகள் 18-Jan-2018 4:31 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோசியேட் டைரக்டராகப் பணிபுரிந்து, சித்தார்த் நடித்த ‘உதயம் என்எச்4’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிமாறன். இப்படத்தைத் தொடர்ந்து பொறியாளன் படத்தில் கதாசிரியராகப் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஜெய் நாயகனாக நடித்த ‘புகழ்’ படத்தை இயக்கினார் மணிமாறன். சித்தார்த், ஜெய்யைத் தொடர்ந்து மணிமாறனின் மூன்றாவது ஹீரோவாக ஆகியிருக்கிறார் சமுத்திரக்கனி.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித்தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சனையை விவரிக்கும் பாரதிதாசனின் ‘தறியுடன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து புதிய படமொன்றை இயக்குகிறார் மணிமாறன். சமுத்திரக்கனி, கருணாஸ், அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘சங்கத்தலைவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.

#Manimaran #ThariyudanNaavalSangathalaivan #Samuthirakani #UdhayamNH4 #GrassRootFilmCompany #Vetrimaran #Poriyalan #Karunaas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;