மதுரவீரனா? மக்கள் செல்வனா? : பிப்ரவரி 2ல் பலப்பரீட்சை!

பிப்ரவரி 2ல் விஜய்சேதுபதியுடன் களத்தில் குதிக்கும் சண்முகபாண்டியன்!

செய்திகள் 19-Jan-2018 10:40 AM IST Chandru கருத்துக்கள்

சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன். அப்படத்தைத் தொடர்ந்து தற்போது பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ‘மதுர வீரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பொங்கல் விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ‘மதுர வீரன்’ படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் பொங்கல் ரிலீஸிலிருந்து விலகிய மதுர வீரன். இந்நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தேதியில்தான் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்.

#PGMuthaiah #MaduraVeeran #Vijayakanth #Shanmugapandiyan #Jallikattu #MakkalSelvan #VijaySethupathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ


;