‘மாங்கல்யம் தந்து நா னே நா’வுக்குத் தயாராகும் நடிகர் ஜெய்!

நடிகர் ஜெய்யின் புதிய படம் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 22-Jan-2018 11:20 AM IST Chandru கருத்துக்கள்

ஜெய் நடிப்பில் கடந்த வருடத்தின் இறுதிப் படமாக வெளிவந்த பலூன் படத்தைத் தொடர்ந்து இந்த வருடத்தில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் கலகலப்பு 2, பார்ட்டி ஆகிய படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஜெய் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அறிமுக இயக்குனர்களான ஷ்யாம், பிரவீன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘மாங்கல்யம் தந்து நா னே நா’ என்று பெயரிட்டுள்ளனராம்.

ஜெய்க்கு ஜோடியாக இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்களாம். அதில் இரண்டாவது நாயகியாக நடிக்க ‘குரங்கு பொம்மை’ நாயகி டெல்னா டேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் மூலம் பிரபலமடைந்த மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் கோயம்புத்தூரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#MangalyamThanthuNaNeNa #Jai #Party #Balloon #Kalakalappu2 #KuranguBommai #DelnaDevis #Anjali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;