‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சியால் மறக்க முடியாத தருணம்?

ஷண்முக பாண்டியனுடன் ‘மதுரவீரன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து கதாநாயகி மினாட்சி அளித்த பேட்டி!

செய்திகள் 24-Jan-2018 12:29 PM IST VRC கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன், அறிமுகம் மீனாக்ஷி இணைந்து நடித்துள்ள படம் ‘மதுரவீரன்’. இந்த படம் ஃபிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து மீனாட்சி பகிர்ந்து கொண்டதன் விவரம் வருமாறு:

நடிப்பு பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவள் நான்! ‘மதுரவீரன்’ படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் பி.ஜி.முத்தையா அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் அவர் இயக்கத்தில் நடிக்கும்போது அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா இல்லை இயக்குனரா என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. அவர் இயக்கத்தில் நடித்தது இனிய அனுபவம்.

அதைப் போலதான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஷண்முகபாண்டியனும். மிகப் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதாரணமாக பழகுபவர்! படப்பிடிப்பில் வசனங்களை பேச எனக்கு பெரிதும் உதவினார். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணம் விஜய்காந்த் அவர்களும், பிரேமலதா அவர்களும் ‘மதுரவீரன்’ படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னுடன் ஒரு மணி நேரம் உரையாடியது! என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது!

என்னுடைய சொந்த ஊர் கேரளாவிலுள்ள ஆலப்புழா! தமிழகத்தின் பசுமையான கிராமங்களில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்! கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் இருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டேன். ‘மதுரவீரன்’ படத்தில் நடித்தது பெருமையான விஷயம்’ என்கிறார் ‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சி!

#MaduraVeeran #Meenakshi #Shanmugapandian #Samuthirakani #PGMuthaiah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;