‘ஏமாலி’யில் புதிய முயற்சி!

ஜெயமோகன் வசனத்தில், வி.இசட். துரை இயக்கியுள்ள ‘ஏமாலி’ ஃபிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 25-Jan-2018 4:56 PM IST VRC கருத்துக்கள்

‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம் ‘ஏமாலி’. அறிமுக நடிகர் சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பெங்களூரை சேர்ந்த ரோஷிணி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களூடன் சமுத்திரக்கனி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, சிங்கம் புலி, பாலசரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘ஏமாலி’ குறித்து இயக்குனர் துரை கூறும்போது, ‘‘இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். 4 லேயர்களாக பயணிக்கும் கதை ஒரு புள்ளியில் முடிகிற மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது என் நம்பிக்கை. நான் இதற்கு முன் இயக்கிய ‘6’ படத்திற்கு வசனங்கள் எழுதிய ஜெயமோகன் அவர்களையே இந்த படத்திற்கும் வசனம் எழுத வைத்துள்ளோம்’’ என்றார்.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதும் ஜெயமோகன் வசனத்தில் வெளியாகவிருக்கும் ‘ஏமாலி’ படத்தை ‘லதா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்க, சாம்.டி.ராஜ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரத்தீஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனித்துள்ளனர்.

#Yemaali #AthulyaRavi #Samuthirakani #VZDurai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;