கொல்கத்தா பயணமாகும் ‘விஜய்-62’ படக்குழு!

சென்னையை தொடர்ந்து ‘விஜய்-62’ படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது!

செய்திகள் 31-Jan-2018 10:44 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குப்பத்துப் பாடலை சென்னையில் படமாக்கியுள்ளனர். இது விஜய்யின் அறிமுக பாடல் என்று கூறப்படுகிறது. சென்னை படப்பிடிப்பை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக படககுழுவினர் மிக விரைவில் கொல்கத்தா படயணமாகவுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில், அதி பயங்கர ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்களாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை கிரீஷ் கங்காதாரன் கவனிக்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.

#Vijay62 #Vijay #ARMurugadoss #KeerthySuresh #SUNPictures #Thalapathy #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;