ஏற்கெனவே பல படங்களில் இணைந்துள்ள சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். அந்த படத்திற்கு ‘பாம்பன்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சரத்குமார் ஒரு வித்தியாசமான ஒரு கெட்-அப்பில் நடிக்கிறார்! ‘எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் பதிவுடன் துவங்கியது. என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தில் சரத்குக்மாருடன் இணைந்து பணியாற்றிய இந்திரா சௌந்தர் ராஜன் இப்படத்திலும் இணைந்துள்ளார்.
#SarathKumar #Pamban #AVenkatesh #NSUdhayakumar #SrikanthDeva #ChennayilOruNaal2
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த...
‘சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. சரண்...