‘அசுரகுரு’வாகும் விக்ரம் பிரபு!

‘பக்கா’, ‘துப்பாக்கி முனை’ ஆகிய படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘அசுரகுரு’.

செய்திகள் 2-Feb-2018 10:46 AM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘பக்கா’, ‘துப்பாகி முனை’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்து ‘அசுரகுரு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ‘அஞ்சனவித்தை’ என்ற குறும்படத்தை இயக்கி தமிழக அரசின் விருது பெற்றவரும், இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவருமான அ.ராஜ்தீப் இந்த படத்தை இயக்குகிறார். இது அதிரடியான ஒரு திகில் படமாம். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடிக்க இருக்கும் கதாநாயகிக்கான தேர்வு நடந்து வர, ’யோகி’ பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வாகியுள்ளனர். இந்த படத்திற்கு ராம்லிங்கம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். ‘ஜே.எஸ்.பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவிருக்கிறது.

#VikramPrabhu #Asuraguru #Pakka #Thuppakimunai #Munishkanth #ARajdeep

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;