ரஜினியின் ‘காலா’ - சந்தோஷ் நாராயணன் முக்கிய ட்வீட்!

‘காலா’வில் ரஜினியின் அறிமுக பாடல் எப்படி இருக்க வேண்டும்? ரசிகர்களிடம் கேள்வி கேட்ட சந்தோஷ் நாராயணன்!

செய்திகள் 12-Feb-2018 3:41 PM IST VRC கருத்துக்கள்

ப.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடிக்கும் ‘காலா’ கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல 27-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்ற அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியானது. ‘காலா’வின் ரிலீஸ் தேதி குறித்துவிட்ட நிலையில் இப்படத்தின் மீதி வேலைகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன் ‘காலா’ படம் குறித்து முக்கிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ‘காலா’ ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா? இல்லை 1990 – 2000 காலகட்டத்து பாடல் மாதிரி இருக்க வேண்டுமா? அதுவும் இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி நவீன ட்யூன்களில் வேண்டுமா? இல்லை என்றால் எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா?’ என்று ரசிகர்களிடமே கேள்விகளை முன் வைத்துள்ளார்!

ஒரு இசை அமைப்பாளர் தான் இசை அமைக்கும் படத்தில் எப்படிப்பட்ட அறிமுக பாடல் மற்றும் ட்யூன் வேண்டும் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது! ‘காலா’ படத்தை பொறுத்தவரையில் ரசிகர்கள் எந்த காலத்து ட்யூனை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!

#Kaala #SuperstarRajinikanth #Rajini #PaRanjith #SanthoshNarayanan #Dhanush #LycaProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;