வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற செய்திகளுக்கு  மறுப்பு தெரிவித்த கமல்ஹாசன்!

செய்திகள் 15-Feb-2018 11:41 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்த்ல் நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்ட் யூனிவர்சிடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து அங்குள்ள நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் அரசியிலில் ஈடுபட்டிருப்பதால் இப்போது நடித்து வரும் படங்கள் தவிரி இனி வேறு திரைப்படங்கலில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் பேசியதாக தகவல் வெளியாக, அதை வைத்து ‘கமல்ஹாசன் இனி சினிமாவில் நடிக்க மாட்டார்’ என்பது போல் இங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.! இந்நிலையில் இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் நடிப்புக்கு முழுக்கு போடவில்லை என்றும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ்நாய்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இதனால் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சினிமாவில் நடிப்பதையும் தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.

#Kamal #KamalHaasan #Politics #Vishwaroopam2 # SabaashNaidu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;