‘என்னுடைய சம்பளத்தை தயாரிப்பாளர்களே முடிவு செய்யலாம்!’ - ராஜ்கமல்

‘இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்கமாட்டேன்!’ - நடிகர் ராஜ்கமல்

செய்திகள் 15-Feb-2018 11:48 AM IST Top 10 கருத்துக்கள்

எம்.எஸ்.எஸ்.இயக்கத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மேல்நாட்டு மருமகன்’. இந்த படம் நாளை வெளியாகிறது. இதனை முன்னிட்டு ராஜ்கமல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,

‘‘நான் இயக்குனர் கே.பாலசந்தர் சார் மூலம் டி.வி. நடிகராக அறிமுகமானவன்! சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தபோது இந்த படத்தில் (மேல்நாட்டு மருமகன்) கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளால் இந்த படம் வெளியாக காலதாமதமானது. இதற்கிடையில் ‘சண்டிக்குதிரை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தேன். இந்த படம் முதலில் வெளியானது. நான் முதலில் கதாநாயகனாக நடிக்க ஓப்புகொண்ட படம் எனது இரண்டாவது படமாக வெளியாகிறது.

சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவற்றில் நடிக்கவில்லை. வாழ்க்கையை நடத்த பணம் தேவை! அதனால் சினிமாவில் எப்படிப்பட்ட ரோல்கள் கிடைத்தாலும் நடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான முயற்சிகள் செய்தபோது, ‘அவர் ஹீரோவாக நடித்தவர், நிறைய சம்பளம் கேட்பார்’ என்று மறைமுகமாக என்னை தொடர்ந்து தவிர்த்து வந்தார்கள்! இந்த விஷயத்தை தெளிவுப்படுத்ததான் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இந்த சந்திப்பின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தேன் என்றாலும் சினிமாவில் எந்த மாதிரியான வேடங்கள் கொடுத்தாலும் நான் நடித்த தயாராக இருக்கிறேன். அது பெரிய கேரக்டராக இருந்தாலும் சரி, சிறிய கேரக்டராக இருந்தாலும் சரி, நான் நடிப்பேன். அதே நேரம் மற்றொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்! எனக்கு இவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்று நான் கேட்க மாட்டேன். எனது சம்பளத்தை தயாரிப்பாளர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். தயாரிப்பாளர் கொடுக்கிரா சம்பளத்தை வாங்கி கொண்டு நான் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் ஒருபோது இவ்வளவும் சம்பளம் தர வேண்டும் என்று கேட்க மாட்டேன். சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்’’ என்றார்.

#Rajkamal #MelnaatuMarumagan #Sandikuthira

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;