‘நானும் ஆன்மீகவாதி தான்!’ – ‘காசு மேலே காசு’ விழாவில் பாரதிராஜா

மயில்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் ‘காசு மேலே காசு’

செய்திகள் 16-Feb-2018 12:30 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் கே.எஸ்.பழனி இயக்கத்தில் புதுமுகம் ஷாருக் கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் ‘காசு மேலே காசு’. இந்த படத்தில் மயில்சாமி இன்னொரு கதாநாயகனை போன்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, சாமிநாதன், கஞ்சா கருப்பு, நளினி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்தை பி.ஹரிஹரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ண்ன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பாண்டியன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாரதிராஜா பேசும்போது,

‘‘ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈசி. ஆனால் காமெடியனாக நடிப்பது கஷ்டம். அதற்கு நகைச்சுவை உணர்வு வேண்டும். அப்படியான நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் மயில்சாமி. அதை விட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன் மயில்சாமி! எனக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழை பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த படத்தின் பாடல்களும் நன்றாக வந்துள்ளது. இந்த படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்’’ என்று படக்குழுவினரை வாழ்த்திப் பேசிய பாரதிராஜா பிறகு சில சமூக கருத்துக்களை வலியுறுத்தியும் பேசினார்.

‘‘நானும் ஆன்மீகவாதி தான்! முருகன் என்பவன் ஆறுபடை வீடுகளை ஆண்ட சாதாரண மனிதன். பின்னாளில் நாம் தான் கடவுள் ஆக்கிட்டோம். நம் நிலம் களவாடப்படுகிறது. மொழி களவாடப்படுகிறது. கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும். விழித்துக்கொள்ளுங்கள்! டைனோசர் இனம் அழிய காரனம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான். தமிழனுக்கு ருத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது. இந்து, கிறிஸ்வர், முஸ்லீம் நீ யாராகவோ இரு. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடம் பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருந்தாலும் சரி, காமன் மேனாக இருக்க வேண்டும்’’ என்றார்.

#KaasuMelaKaasu #BharathiRaja #Vivek #PVasu #Bakiyaraj #AudioLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தும்பா ட்ரைலர்


;