விநாயக சதுர்த்தியை குறிவைக்கும் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா விநாயக சதுர்த்திக்கு வெளியாகிறது!

செய்திகள் 17-Feb-2018 10:38 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியாகிய ‘வேலைக்காரன்’ திரைப்படம் தொடர்ந்து 50 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த படத்திற்கு ‘சீமராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் இந்த டைட்டிலுடன் கூடிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான ஃபிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம், அதன்படி ‘சீமராஜா’வின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு வெளியானது. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கில், ‘சீமராஜா’ விநாயக சதுர்த்திக்கு ரிலீசாகவிருக்கிற அறிவிப்பும் இடம் பெற்றிருக்கிறது. இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் செய்தியாகும். .

சிவகார்த்திகேயனுடன் சமந்தா,. சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். பொன்ராம், சிவகார்த்திகேயனுடன் டி.இமான் இணைவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜாவின் ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கும் ‘சீமராஜா’ ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது!

#SeemaRaja #SivaKarthikeyan #SK12 #Samantha #Ponram #Soori #Rishikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;