‘நாச்சியார்’ படத்துக்கு சிவகுமார் பாராட்டு!

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ‘நாசசியார்’ படத்திற்கு சிவகுமார் பாராட்டு!

செய்திகள் 19-Feb-2018 4:41 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான படம் ‘நாச்சியார்’. நல்ல விமர்சனங்கள் கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை பார்த்த நடிகர் சிவகுமாரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘‘பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்கு பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக் காதலை காட்டிய வித்தை! வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஒரு நல்ல கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவை வாழ்த்தி வரவேற்போம். இனிமேல் ஜி.வி.பிரகாஷ் துஷ்டப்பயல் போன்ற கேரக்டரில் நடிக்க கூடாது. அந்த அளவுக்கு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்து விட்டார் பாலா. அரசியாக நடித்த இளம் தேவதையை எங்கு கண்டு பிடித்தாரோ? அற்புதமான மொழி பேசும் கண்களும், அது காட்டும் பாவனைகளும்… அடடா….

‘நாச்சியார்’ என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்பெட் வரவேற்பை தரவேண்டும்! குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைத் தான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று ‘சிங்க’த்துக்கே பாடம் எடுத்துள்ளார்.

ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை ஆகியவையும் சிறப்பாக அமைந்துள்ள ‘நாச்சியார்’ எனும் நல்ல ஒரு படத்தை தந்த பாலாவுக்கு நன்றிகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்!

#Naachiyar #Bala #Jyothika #GVPrakashKumar #Ilayaraja #Eeshwar #BStudios #EONStudios #GVPrakash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - ட்ரைலர்


;