நண்பனுக்காக தயாரிப்பாளராகிய பிரபல ஹீரோ!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 19-Feb-2018 6:10 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகரும், பாடலாசிரியரும், பாடகருமான அருண் ராஜா காமராஜும் நீண்டகால நண்பர்களாவர்! சிவகார்த்திகேயன் நடித்த பெரும்பாலான திரைப்படங்களிலும் அருண்ராஜா காமராஜின் பங்களிப்பு இருந்துள்ளது. அப்படிப்பட்ட தனது நண்பர் அருண்ராஜா காமராஜுக்காக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, அருண்ராஜா காமராஜை இயக்குனர் ஆக்கியுள்ளார். அதாவது ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதன் முதல் தயாரிப்பாக அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்! இந்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம். இதுகுறித்த தகவலை அருண்ராஜா காமராஜ் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முதலானோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

#SivaKarthikeyan #ArunRaja #SivaKarthikeyan #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SathyaRaj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;