‘கோ.கோ’ - மார்ச் 5, 8 தேதிகள் குறித்த நயன்தாரா!

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’வின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 5ஆம் தேதியும், சிங்கிள் டிராக் 8-ஆம் தேதியும் வெளியாகிறது!

செய்திகள் 27-Feb-2018 12:18 PM IST Top 10 கருத்துக்கள்

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா ‘கோலமாவு கொகிலா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் இந்த பத்திற்கு அனிருத் இசை அமைக்கவிருக்கிறார் என்றும், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த படத்தில் நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்னன், யோகி பாபு, ஜாகுலின் ஆகியோர் நடிக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபகாலமாக நயன்தாரா கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் அவர் தேர்வு செய்துள்ள இந்த ‘கோலமாவு கோகிலா’ படமும் அதே போன்ற ஒரு படம்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் மாதம் 5-ஆம் தேதியும், சிங்கிள் டிராக்கை மார்ச் 8-ஆம் தேதியும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

‘அறம்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து நயன்தாரா நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Nayanthara #KolamaavuKokila #Nelson #SaranyaPonvannan #YogiBabu #AnirudhRavichander #LycaProductions #Coco

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;