ஆங்கில பட ‘ரீ-மேக்’குக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஹிந்தியில் உருவாகும் ‘The Fault in our Stars’   ரீ-மேக்கிற்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 9-Mar-2018 1:27 PM IST VRC கருத்துக்கள்

ஹாலிவுட் படமான ‘The Fault in our Stars’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். முகேஷ் சப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் ‘M.S.Dhoni’ ஹிந்தி படத்தில் கதையின் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ரஜ்புத் கதாநாயகனாக நடிக்கிறார். புற்றுநோய் பாதித்த காதலன் - காதலி பற்றிய கதையை கொண்ட இப்படத்தில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதாம். ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது ஷங்கரின் ‘2.0’, மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’, ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’, விஜய்-62, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ArRahman #TheFaultInOurStars #SushanthSinghRajput #FoxStarStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;