அதர்வா படத்துக்கு 1 கோடி ரூபாய் செலவில் செட்!

ஒரு கோடி ரூபாய் செட்டில் அதர்வாவின் ‘பூமராங்’ பாடல் காட்சியின்  படப்பிடிப்பு!

செய்திகள் 12-Mar-2018 5:19 PM IST VRC கருத்துக்கள்

‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. இந்த படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், உபன் பட்டேல், ‘மேயாத மான்’ படப் புகழ் இந்துஜா ஆகியோர் முக்கிய கேரட்கர்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆர்.கண்ணன் தனது ‘மசாலா ஃபிக்ஸ்’ நிறுவனம் சார்பில் இயக்கி தயாரிக்கும் இந்த பத்தின் ஒரு பாடல் காட்சிக்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமான செட் ஒன்றை உருவாக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

கலை இயக்குனர் ஷிவா யாதவ் அமைத்துள்ள இந்த செட் குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, ‘‘ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட ஆக்‌ஷன் படம் ‘பூமராங்’. இதில் தேசப்பற்று பாடல் ஒன்று உண்டு. அதை மிகப் பிரம்மாண்டமான முறையில் படமாக்க வேண்டும் என்பதற்காக ஒரு செட்டை உருவாக்கியுள்ளோம். ரதன் இசையில் விவேக் எழுதியுள்ள இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைக்கிறார். இந்த பாடல் காட்சியில் 2000 துணை நடிகைகள் மற்றும் 100 நடன கலைஞர்கள் கலந்துகொண்டு நடனம் ஆடுகிறார்கள். இந்த பாடல் ‘பூமராங்’ படத்தின் ஹைலைட்ஸ்களில் ஒன்றாக இருக்கும். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது’’ என்று கூறியுள்ளார்.

#Boomerang #Atharavaa #RJBalaji #DirectorKannan #MeghaAkash #Indhuja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;