பிரபாஸுக்கு ஜோடியாகும் ஜீவா பட ஹீரோயின்!

’சாஹோ’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தில் ‘முகமூடி’ ஹீரோயின்!

செய்திகள் 13-Mar-2018 10:58 AM IST VRC கருத்துக்கள்

’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படம் முடிந்ததும் பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படமும் தெலுங்கு ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஹிந்தியில் ரித்திக் ரோஷன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிரார். அடுத்து பிரபாஸுடன் இணைந்து நடிக்கவிருக்கும் பூஜா ஹெக்டே நடித்த முதல் படம் எது என்று தெரியுமா? மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ தான். இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார்.

#PoojaHegde #Prabhas #Saaho #Baahubali #Rangasthalam #Race3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;