‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் நிஜ ரசிகர்!

’விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் நிஜ ரசிகரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷும் நடிக்கிறார்!

செய்திகள் 20-Mar-2018 10:47 AM IST VRC கருத்துக்கள்

அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 23-ஆம் தேதி துவங்கவிருந்தது. ஆனால் இப்போது நடந்து வரும் சினிமா ஸ்டிரைக் காரணமாக அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக் முடிந்ததும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில் இப்படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக ஏற்கெனவே ‘ரோபோ’ சங்கர், தம்பி ராமையா, ‘யோகி’ பாபு முதலானோர் தேர்வாகியுள்ள நிலையில் இப்போது மற்றொரு பிரபலமும் இப்படத்தில் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவர் ஆர்.கே.சுரேஷ்! நிஜமாகவே ஆர்.கே.சுரேஷ் அஜித்தின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. இவர் கதாநாயகனாக நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ படத்தில் கூட அஜித் ரசிகர் கேரக்டரில் தான் ஆர்.கே.சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித்துடன் அவரது நிஜ ரசிகரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்கவிருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்.

#Viswasam #Thala #Ajith #Nayanthara #YogiBabu #RoboShankar #ThambiRamaiah #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா ட்ரைலர்


;