‘பூமராங்’கில் வித்தியாசமான கெட்-அப்பில் தோன்றும் அதர்வா!

‘பூமராங்’ படத்திற்காக வித்தியாமான கெட்-அப் போடும் அதர்வா!

செய்திகள் 29-Mar-2018 12:37 PM IST VRC கருத்துக்கள்

‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கி வரும் படம் ’பூமராங்’. இந்த படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், உபன் பட்டேல், ‘மேயாத மான்’ படப் புகழ் இந்துஜா ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள். இதில் அதர்வா மாறுபட்ட பல கெட்-அப்களில் தோன்றி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதில் ஒரு கெட்-அப்பிற்காக அதர்வா மேக்-அப் போடுவது மாதிரியான புகைப்படங்கள் இப்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது அதர்வா இந்த படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. ‘மசாலா ஃபிக்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கண்ணன் இயக்கி தயாரிக்கும் இந்த படத்திற்காக சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Boomerang #Atharvaa #RJBalaji #MeghaAkash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;