மீண்டும் இணையும் தனுஷ், அனிருத்!

2019-ல் தனுஷும், அனிருத்தும் இணையும் படம்!  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்!

செய்திகள் 2-Apr-2018 8:15 PM IST VRM கருத்துக்கள்

தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ ‘தங்கமகன்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைத்தார் அனிருத். அத்துடன் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ முதலான படங்களுக்கு இசை அமைத்தார். இந்த படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்திலும் இணையவில்லை. இதை வைத்து தனுஷ், அனிருத் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் சமீபகாலமாக இருவரும இணைந்து படங்கள் பண்ணவில்லை என்றும் ஒரு பேச்சு கோலிவுட்டில் நிலவி வந்தது. ஆனால் இதற்கு விளக்கம் தரும் விதமாக அனிருத் சமீபத்தில் நமது, ‘OPEN PANNAA’ யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் எனக்கும், தனுஷுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை! மிக விரைவிலேயே, அதாவது 2019-ல் நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். இதனால் தனுஷும், அனிருத்தும் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;