தென்னிந்திய நடிகர் சங்கமும் போராட்டத்தில் குதிக்கிறது!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தென்னிந்திய சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம்!

செய்திகள் 3-Apr-2018 5:29 PM IST VRC கருத்துக்கள்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரியும் தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர், பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் வலுபெற்று வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், திரை உலகை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட கோரியும் கண்டன அறவழி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த போராட்டம் வருகிற 8-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மத்தியம் 1 மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்திருக்கிறார்கள்! அத்துடன் இந்த அறவழிப் போராட்டத்தில் திரைப்பட துறையை சேர்ந்த அனவரும் பங்கேற்க வேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த போராட்டத்தில் திரையுலகை சேர்ந்த அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

#SIAA #SouthIndianArtistAssociation #Cauveryissue #SterliteProtest #Naaser #Vishal #Karthi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;