அஜித்தின் ‘விஸ்வாச’த்தில் இணையும் மற்றொரு பிரபலம்!

அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் முதன் முதலாக இணையும் போஸ் வெங்கட்!

செய்திகள் 4-Apr-2018 11:24 AM IST VRC கருத்துக்கள்

சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் அஜித், நயன்தயாராவுடன் நடிக்க யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முதலானோர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்போது மற்றொரு பிரபல நடிகரும் இப்படத்தில் இணைந்துள்ளார். அவர் ‘போஸ்’ வெங்கட்! இவர் ஏற்கெனவே அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் வில்லனுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஆனால் இதுவரை அஜித்துடன் இணைந்து நடித்ததில்லை. அந்த குறை ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நிறைவேறுகிறது. இந்த படத்தை ’சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.

#Viswasam #Thala #Ajith #BoseVenkat

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;