‘திட்டம் போட்டு திருடுற கூட்ட’த்தில் இணைந்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

‘கயல்’ சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது!

செய்திகள் 4-Apr-2018 11:33 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. ‘2 MOVIE BUFF’ மற்றும் ‘ACROSS FILMS’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திம் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘சுட்டகதை’, ‘நளனும் நந்தினியும்’ உட்பட சில படங்களை தயாரித்த ரவீந்தர் சந்திரசேகரின் ’லிப்ரா புரொக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்பதை இப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸுடன் பார்த்திபன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் உருவாக, இப்பத்திற்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார். அஷ்வத் இசை அமைத்துள்ளார்.

#TPTK #LibraProductions #Chandramouli #Parthipan #SatnaTitus

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராஜாதி ராஜா வீடியோ பாடல் - மிஸ்டர் சந்திரமௌலி


;