விக்ரம் பிரபுவுடன் இணையும் ‘குற்றம்-23’ நாயகி!

‘அசுரகுரு’ விக்ரம் பிரபுவுடன் முதன் முதலாக இணையும் மகிமா நம்பியார்

செய்திகள் 10-Apr-2018 1:02 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு நடித்து வரும் ‘பக்கா’ மற்றும் ‘துப்பாக்கி முனையில்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்த படங்களுடன் விக்ரம் பிரபு நடிக்கும் மற்றொரு படம் ‘அசுரகுரு’. இந்த படத்தை ராஜ்தீப் இயக்குகிரார். இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வந்தது. இப்போது ‘அசுரகுரு’வில் கதாநாயகியாக நடிக்க மகிமா நம்பியார் தேர்வாகியுள்ளார். இதனை அவரே நம்மிடம் உறுதி செய்தார். ‘சாட்டை’, ‘குற்றம்-2’3, ‘புரியாத புதிர்’, ‘கொடி வீரன்’, முதலான படங்களில் நடித்தவர் மகிமா நம்பியார்! விரைவில் வெளியாகவிருக்கும் அருள் நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்திலும் மகிமா நம்பியார்தான் கதாநாயகி! இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் முதன் முதலாக ‘அசுரகுரு’வில் இணைகிறார் மகிமா நம்பியார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

#VikramPrabhu #AsuraGuru #MahimaNambiar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகாமுனி -டீஸர்


;