முடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக்!

சினிமா ஸ்டிரைக் முடிவடைந்ததை தொடர்ந்து மிக விரைவில் வெளியாகவிருக்கிறது புதிய திரைப்படங்கள்!

செய்திகள் 18-Apr-2018 11:35 AM IST VRC கருத்துக்கள்

சென்ற மாதம் (மார்ச்) 1-ஆம் தேதி முதல் துவங்கிய சினிமா ஸ்டிரைக் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 48 நாட்களாக நடந்து வந்த இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தமிழக அரசு சார்பில் நேற்று சென்னையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள், டிஜிட்டல் சேவை நிறுவனத்தினர், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் நேற்று நடந்த பல மணிநேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு அனைத்து பிரச்சனைகளிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால் சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இருந்தாலும் எந்த தேதியிலிருந்து புதிய திரைப்படங்கள் வெளியாகும், எந்த தேதியிலிருந்து படப்பிடிப்பு உட்பட்ட சினிமா வேலைகள் துவங்கும் என்பது குறித்து இன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒன்றுகூடி பேசி முடிவு எடுக்க இருக்கின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தினரின் இந்த சந்திப்புக்கு பிறகு புதிய திரைப்படங்கள் எப்போது வெளியாகும், எந்த தேதியிலிருந்து பட வேலைகள் துவங்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த சினி9மா ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியூப்லைட் - டிரைலர்


;