காலா கரிகாலனுக்கு வில்லனாகிறாரா வேதா?

ரஜினி படத்தில் விஜய்சேதுபதி! உறுதி செய்த பட நிறுவனம்!

செய்திகள் 26-Apr-2018 11:31 AM IST Top 10 கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகார்பூர்வ தகவலையும் பட குழுவினர் வெளியிடவில்லை. ஆனால் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்ற தகவலை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார இல்லை வேறு முக்கியமான கேரக்டரை ஏற்கிறாரா என்பது குறித்த எந்த விவரங்களையும் படக் குழுவினர் வெளியிடவில்லை! இருந்தாலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பது வில்லன் பாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. இது உண்மையான தகவல் என்றால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் காலா கரிகாலனுடன் வேதா மோதும் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பது நிச்சயம். இந்த படத்தின் மூலம் ரஜினியுடன் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறார் இசை அமைப்பாலர் அனிருத் என்பது ஏற்கெனவே வெளியான தகவலாகும்.

#Kaala #Rajinikanth #VijaySethupathi #SunPictures #AnirudhRavichander #KarthikSubburaj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;