கூட்டணி அமைத்த விமல், வடிவேலு!

சுராஜ் இயக்கத்தில் விமல், வடிவேலு போலீஸ்காரர்களாக நடிக்கும் படம்!

செய்திகள் 30-Apr-2018 4:45 PM IST Top 10 கருத்துக்கள்

விமல் இப்போது ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கன்னிராசி’ படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து விட்டது என்றும் இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘களவாணி-2’ படத்தின் படப்பிடிபு மே 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து விமல் எழில், சுராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் சுராஜ் இயக்கும் படத்தில் விமலுடன் வடிவேலு நடிக்க இருக்கிறார். இப்படம் முழுநீள காமெடி படமாக உருவாவகவிருக்கிறது என்றும் இந்த படத்தில் விமலும், வடிவேலுவும் போலீஸ் காரர்களாக நடிக்க இருக்கிறார்கள் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.#Vemal #Vadivelu #Kalavani-2 #Kanni Rasi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மன்னர் வகையறா - தட்டான போல ப்ரோமோ


;