ஆதிக், ஜி.வி.படத்தில் ‘2.0’ தொழில்நுட்ப கலைஞர்கள்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘3டி’ படத்தில் 2.0 கலைஞர்கள்!

செய்திகள் 3-May-2018 11:41 AM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இந்த படம் 3டி படமாக உருவாகவிருக்கிறது என்றும் இந்த படத்தில் தனுஷுடன் ‘அநேகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த அமீரா தஸ்தர் ஜி.வி.க்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இரண்டு கட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த இப்படத்தில் இப்போது சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் என மற்றும் இரண்டு கதாநாயகிகள் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு ‘கவண்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தை ‘அரண்மனை’ படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். ஃபாண்டசி லவ் ஸ்டோரியாக 3டி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ரஜினியின் ‘2.0’ படத்தில் பணிபுரியும் 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் பணியாற்றுகிறார்கள். ஊட்டியில் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்து சென்னை மற்றும் காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவிருக்கிற்து என்று நாம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசியபோது தெரிவித்தார்!

#GVPrakash #Adhik #SoniaAgarwal #AmyraDatusr #SanchithaShetty #VirginMapillai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;