நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளை எழுதியுள்ளவர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன். இவர் உடல்நலகுறைவால் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் அந்த சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த பாலகுமாரனுக்கு வயது 71. கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள பாலகுமாரன் சினிமாவுக்காகவும் நிறைய எழுதியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, ‘குணா’, ரஜினி நடித்த ‘பாட்ஷா’, ஷங்கர் இயக்கிய ‘ஜெண்டில்மேன்’, ‘காதலன்’, அஜித நடித்த ‘உல்லாசம்’, ‘முகவரி’ உட்பட பல படங்களின் திரைக்கதை வசனங்களை எழுதியுள்ள பாலகுமாரன் ஒரு படத்தை இயக்கவும் செய்துள்ளார். அந்த படம் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘இது நம்ம் ஆளு’. ஆன்மீக விஷயஙகளிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது. பாலகுமாரனின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாகும்!
#Balakumaran #WriterBalakumaran #Guna #Baasha #Gentleman #Kadhalan #Ullasam #Mugavari #Rajini #Kamal #Ajith
ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா...
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்து ‘உதயம் என்.எச்.4’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது....