சூர்யாவின் ‘NGK’ பற்றிய புதிய தகவல்!

சூர்யாவின் ‘NGK’ யின் படத்தொகுப்பாளர் மாற்றம்!

செய்திகள் 25-May-2018 11:06 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவக்குமர் விஜயன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். முதலில் இந்த படத்தில் ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்ற இருந்தார். ஆனால் இப்போது இந்த படத்தில் கே.எல்.பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியாக்யுள்ளது. இது குறித்து கே.எல்.பிரவீன் ட்வீட் செய்துள்ளதில் Super excited to be part of @Suriya_offl sir and @selvaraghavan sir's #NGK thanks to @prabhu_sr sir for the opportunity. Always looked up to Selva sir for
his writing and films. With @thisisysr and selva sirs magical combo this is one is pretty xciting
for me என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாஸ்’ படத்தில் கே.எல்.பிரவீன் தான் படத்தொகுப்பாளராக பணி புரிந்தார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது இரண்டாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார் கே.எல்.பிரவீன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘NGK’யின் படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

#NGK #Suriya #KLPraveen #Selvaraghavan #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;