ரஜினி படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜின் இன்னொரு ஃபேவரிட் நடிகர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்த்ல் ரஜினி நடிக்கும் படத்தில் பாபி சிம்ஹாவும் நடிக்கிறார்!

செய்திகள் 26-May-2018 11:07 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படமும் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சனந்த் ரெட்டி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜின் இன்னொரு ஃபேவரிட் நடிகரான பாபி சிம்ஹாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலையும் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ஆனால் சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இந்த படத்தில் நடிப்பது குறித்து இந்த படத்தை தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Rajinikanth #Kaala #2Point0 #KarthikSubburaj #AnirudhRavichander #VijaySethupathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;