அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக ‘விஸ்வாசம்’ படக்குழுவினர் மும்பை கிளம்பவிருக்கின்றனர். இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு முதலானோர் நடித்து வர, இப்போது இன்னொரு நடிகையும் ‘விஸ்வாச’த்தில் இணைந்துள்ளார். அவர் சாக்ஷி அகர்வால். ‘ராஜா ராணி’, ‘திருட்டு விசிடி’ முதலான படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் ரஜினியின் ‘காலா’விலும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். ‘காலா’ படம் மூலம் ரஜினியுடன் நடித்த சாக்ஷி அகர்வால் இப்போது ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் அஜித்துடனும் இணைந்து நடிக்கிறார்.. சிவா இயக்கும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Viswasam #Ajith #Thala #Nayanthara #KajalAggarwal #SakshiAgarwal
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...