சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி!

‘கோலிசோடா-2’வில் சமுத்திரக்கனியின் பங்களிப்பு குறித்து இயக்குனர்கள் விஜய் மில்டன், கௌதம் வாசுதேவ் மேனன்!

செய்திகள் 11-Jun-2018 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோலி சோடா- 2’. இந்த படத்தில் சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குருப் ஆகியோருடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது,

‘இந்த படத்தில் நடிக்க விஜய் மில்டன் என்னை நடிக்க கூப்பிட்டபோது, யாரெல்லாம் நடிக்கிறாங்கனு கேட்டேன். சமுத்திரகனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரகனி. அவர் எனக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்’’ என்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.இயக்குனர் விஜய் மில்டன் பேசும்போது, ‘‘கோலி சோடா’ மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். ‘கோலி சோடா’வுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. ‘கோலி சோடா’ படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம். நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு ‘பொண்டாட்டி…’ பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார். சமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது’’ என்றார்.

‘கோலிசோடா’, ‘கடுகு’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘கோலிசோடா-2’ வருகிற 14-ஆம் தேதி வெளியாகிறது.

#GoliSoda2 #GST #VijayMilton #Samuthrakani #GauthamVasudevMenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;