‘என் முகம் ரசிகர்களுக்கு பிடிக்குமா?’ என்று கேட்ட விஜய்சேதுபதி!

‘ஜுங்கா’ பட விழாவில் விஜய்சேதுபதி குறித்து சரண்யா பொன்வண்ணன் பேசியத விவரம்!

செய்திகள் 13-Jun-2018 2:20 PM IST Top 10 கருத்துக்கள்

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ‘யோகி’ பாபு, சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன் முதலானோர் நடிக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய்சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், அருண்பாண்டியனின் ‘A&P GROUPS’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது சரண்யா பொன்வண்ணன் விஜய்சேதுபதி குறித்து பேசும்போது,

‘‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்கு பின்னர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் இப்படத்தில் நடித்துள்ளேன். ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தில் நடிக்கும்போது விஜய்சேதுபதி, என்னிடம் பேசும்போது ‘என் முகத்தை ரசிகர்களுக்கு பிடிக்குமா?’ என்று கேட்டார். அப்போது அவரிடம், ‘உங்கள் முகம் குழந்தை முகம் மாதிரி அழகாகதானே இருக்கிறது? உங்களை போன்ற பல பேர் சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார்கள். அதுபோன்று நீங்களும் வருவீர்கள்! உங்களிடம் அதற்கான திறமைகள் இருக்கிறது’ என்று சொன்னேன். அப்போது அவ்வளவு பயந்து கொண்டிருந்த விஜய்சேதுபதி இன்று பெரிய நடிகராக உச்சத்திற்கு வந்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அவரிடம் இருந்து இந்த படத்திற்காக சம்பளமும் வாங்கியிருக்கிறேன். அதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு, எளிமை, எல்லோரையும் மதிக்கும் நல்ல குணம் இதுதான் விஜய்சேதுபதியின் வெற்றிக்கு காரனம். அவருடன் இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்’’ என்றார் சரண்யா பொன்வண்ணன்!

#JungaAudioLaunch #Junga #VijaySethupathi #Sayyesha #MadonnaSebastian #Gokul

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;