இந்த வாரம் எத்தனை படங்கள்?

இந்த வாரம் கோலிசோடா-2, என்னோடு நீ இருந்தால், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, கன்னக்கோல் ஆகிய 4 திரைப்படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 14-Jun-2018 7:30 PM IST VRC கருத்துக்கள்

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் 4 திரைப்படங்கள் வெளியாகின்றன! அந்த படங்களின் விவரம் வருமாறு:

1. ‘கோலிசோடா-2’- விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், பரத் சீனி, சுபிக்‌ஷா, வினோத், எசக்கி பரத், க்ரிஷா குருப் முதலானோர் நடித்திருக்கும் இந்த படத்தை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. முதல்பாக ‘கோலிசோடா’ பெரும் வெற்றியடைந்த படம் என்பதால் அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘கோலிசோடா-2’ படம் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை ‘கோலிசோடா-2’ பூர்த்தி செய்துள்ளதா என்பது இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் ஓரிரு காட்சிகளுக்கு பிறகு தெரிந்து விடும்.

2. என்னோடு நீ இருந்தால் – அறிமுக இயக்குனர் மு.ரா.சத்யா இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மானசா நாயர் நடித்துள்ளார். இவர்களுடன் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ரோகிணி அஜய் ரத்னம், வையாபுரி, மீரா கிருஷ்ணா, பிளாக் பாண்டி முதலானோரும் நடிக்க, இந்த படத்திற்கு கே.கே. இசை அமைத்துள்ளார். இந்த படம் காதல் மர்மம் மற்றும் திகில் படமாக உருவாகியுள்ளதோடு நல்ல ஒரு சமூக கருத்தையும் வலியுறுத்தும் படமாம்!

3 கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கயா - ‘ஹெவன் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ், நடிகை இனியாவின் தங்கை தாரா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர்கள் ஆர்.சுந்தர் ராஜன், ஆர்.வி.உதயகுமார். கே.பாக்யராஜ், அனுமோகன், மன்சூரலிகான், ராஜ்கபூர் மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா கண்ணன், ராஜ், திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ரசாக் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பமாகும். ஏற்கெனவே ரிலீஸ் தேதி குறித்து அந்த தேதியில் வெளியாகாமல் இருந்த இந்த படம் நாளை (15-6-18) வெளியாகவிருக்கிறது.

4. கன்னக்கோல் – ‘நடோடிகள்’ பரணி நாயகனாகவும், புதுமுகம் காருண்யா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வி.ஏ.குமரேசன் இயக்கியுள்ளார். ‘சற்குரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் டாக்டர் வி.ராம்தாஸ் தயாரித்துள்ள இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாம். இந்த படத்தில் கஞ்சா கருப்பு, இளவரசு, ராஜ்கபூர், சார்லி, சிங்கமுத்து, ‘தீப்பெட்டி’ கணேசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த நான்கு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பை தரும் என்பது ஓரிரு நாட்களுக்குள் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோலி சோடா 2 ட்ரைலர்


;