‘SK-14’ படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!

சிவகார்த்திகேயனின் 14-வது படத்தில் பாலிவுட் நடன இயக்குனர் பரேஷ் ஷிரோத்கர்!

செய்திகள் 28-Jun-2018 11:45 AM IST VRC கருத்துக்கள்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் பூஜை நேற்று நடந்தது. ஆர்.டி.ரஜாவின் ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் 14-வது படமாகும். இந்த படத்தில் ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை முத்துராஜ் கவனிக்கிறார். இப்படி முன்னணி கலைஞர்கள் பலர் கூட்டணி. அமைத்து உருவாக்கி வரும் இந்த படத்தில் இப்போது பாலிவுட் பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார். அவர் பிரபல பாலிவுட் நடன இயக்குனர் பரேஷ் ஷிரோத்கர். இவர்தான் ‘SK-14’ படத்திற்கான நடன காட்சிகளை அமைக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ‘24 AM STUDIOS’ நிறுவனம்.

#24AMStudios #SivaKarthikeyan #RakulPreet #ARRahman #Ravikumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;