மீண்டும் இணையும் ‘கழுகு’ டீம்!

சத்யசிவா இயக்கத்தில் மீண்டும் கிருஷ்ணா, பிந்துமாதவி நடிக்கும் படம் ‘கழுகு-2’

செய்திகள் 28-Jun-2018 12:09 PM IST VRC கருத்துக்கள்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்துமாதவி கதாநாயகன், கதாநாயகியாக நடித்து 2012-ல் வெளியான படம் ‘கழுகு’. இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. ஏற்கெனவே வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வரும் நிலையில் ‘கழுகு’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. ‘கழுகு-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மூணாறில் துவங்கியது. முதல் பாகத்தை இயக்கிய சத்யசிவாவே இரண்டாம் பாகத்தையும் இயக்க, முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்துமாதவி இருவரும் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். முதல் பாகத்துக்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்துக்கும் இசை அமைக்கிறார். இந்த கூட்டணியுடன் காளிவெங்கட்டும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை ‘GK STUDIOS’ நிறுவனம் சார்பில் திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கிறார்.

#Kazhugu2 #Krishna #BindhuMadavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;