லேடி சூப்பர்ஸ்டாருடன் இணையும் கலையரசன்!

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா  நடிக்கும் படத்தில் கலையரனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்!

செய்திகள் 7-Jul-2018 1:00 PM IST VRC கருத்துக்கள்

‘மா’, ‘லக்‌ஷ்மி’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன் தாரா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. மாறுபட்ட கதைகளையும் கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவுக்கு இப்படத்திலும் வித்தியாசமான கேரக்டர் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் கலையரசனும் இணைந்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடிக்கும் கேரக்டரை சுற்றி முக்கியமான நான்கைந்து கேரக்டர்கள் உண்டாம்!. அதில் ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் கலையரசன். சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்க துவங்கி இப்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் கலையரசன், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுடன் நடிக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் கலையரசன் நடிக்க ஒப்புக் கொள்ள காரணம், இயக்குனர் சர்ஜுன் தனக்கு சொல்லப்பட்ட அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து தானாம்! ஆகஸ்டில் துவங்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சர்ஜுன்,

#Nayanthara #Sarjun #Kalaiarasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;