புதிய ரூட்டில் வெங்கட் பிரபு!

நாளை காலை 11 மணிக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட டைட்டில் அறிவிப்பு!

செய்திகள் 9-Jul-2018 11:38 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இப்போது இயக்கி வரும் ‘பார்ட்டி’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் ஈடுபட உள்ளார். வெங்கட் பிரபுவும், சிம்புவும் முதன் முறையாக இணையும் இந்த படத்தை ‘கங்காரு’ படத்தை தயாரித்தவரும், தற்போது, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருபவருமான சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள படக்குழுவினர் நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் டைட்டில் அறிவிக்க உள்ளனர். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு எப்போதுமே தான் இயக்கும் படங்களின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்த பிற்கே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் சிம்பு படத்தின் மூலம் வெங்கட் பிரபு புதிய ஒரு ரூட்டில் பயணிக்க துவங்கியுள்ளார்.

#VenkatPrabhu #STR #STRVP #VP9

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;