‘ஆமாம், நான் திமிரு பிடிச்சவன் தான்!’ – சிம்பு OPEN TALK

‘OPEN PANNAA’ யு-ட்யூப் சேனலுக்கு சிம்பு அளித்த  பேட்டியிலிருந்து….

கட்டுரை 10-Jul-2018 5:52 PM IST Top 10 கருத்துக்கள்

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸின் இன்னொரு அங்கமான ‘OPEN PANNA’ யு-ட்யூப் சேனலுக்காக நடிகர் சிம்பு சமீபத்தில் பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியின் முதல் பாகம் நேற்று (9-7-18) மாலை யு-ட்யூபில் வெளியானது. அந்த பேட்டியில் சிம்பு பேசிய சில விஷங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக…

‘நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப டென்னிஸ், ஸ்போர்ட்ஸ், டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் கலந்துக்குவேன். காரணம் என்னோட திறமை வளர்த்துக்கணுங்கிறதுக்காக இல்ல! க்ளாஸ்ல இருந்து வெளியே போகணுங்கிறதுக்காததான். அப்ப க்ளாஸ்ல இருக்கிறது எனக்கு புடிக்கவே புடிக்காது. அஞ்சாம் கிளாஸ் வரை செமயா படிச்சேன். அத்துக்கப்புறம் ஒரு பக்கம் அப்பா, அம்மா இன்னொரு பக்கம் டீச்சர்னு அடி வாங்கி, அடி வாங்கிதான் படிச்சேன். அப்படி படிச்சு எல்லாத்துலயும் கலந்துகிட்டு நான் வாங்குன கப், பரிசு பொருட்களை எல்லாம் அம்மா ஒரு நாள் காயலான் கடையில போட்டுட்டாங்க. அதை பார்த்து, ‘ஏன் அம்மா இப்படின்னு?’ கேட்டப்போ, ‘இதெல்லாம் உனக்கு எதுக்கு? உன்னோட லைஃப் வேற’’ன்னார். அம்மா அப்போது அப்படி சொன்னதுல ஒரு வருத்தமும் இருந்துச்சு, நல்ல ஒரு விஷயமும் இருந்துச்சு! அந்த நல்ல விஷயம்தான் நான் இப்ப இந்த இடத்துல உட்காந்திருக்கிறது.

தொட்டி ஜெயா, கோவில், விண்ணைத்தாண்டி வருவாயான்னு நிறைய மாறுபட்ட படங்கள கஷ்டப்பட்டு பண்ணேன். ஆனா அப்பல்லாம் யாரும் அதை பத்தி யாரும் பெரிசா பேசலை, ஆனா இப்ப பேசறாங்க! அப்ப பேசியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்!

நான் எல்லா விஷயங்களயும் ஓப்பனா பேசுறவன். அப்படி நான் பேசுற விஷயங்கள் சில சமயத்துல எனக்கே பிரச்சனையாக அமைந்திருக்கு! ஆனா நான் அதை பத்தியெல்லாம் கவலைப்படறதுல்ல. காரணம் நான் இப்படிதான் இருப்பேன். நான் யாருக்காகவும் பயப்படமாட்டேன்!

நிறைய பேர் என்னை, என்னடா இவன் இப்படி பண்றான், அப்படி பண்றானு பேசுறாங்க. அப்படி பேசுறவங்களால நான் செய்யறது மாதிரி செய்ய முடியுமா? ஒருவரால செய்ய முடியாததை வேறு ஒருவர் செய்யும்போது அதை பாரட்டலைனா கூட பரவாயில்ல, கேலி செய்யாமலிருக்கலாம் அல்லவா? அதைப் போல சிம்பு ரொம்பவும் திமிரு பிடிச்சவன், தலைக்கனம் பிடிச்சவனு பேசறாங்க! இப்படி என்னை எப்பவும் கார்னர் பண்றதிலேயே நிறைய பேர் இருக்காங்க! அவங்களுக்கு நான் ஒண்ணை சொல்லி கொள்கிறேன், ஆமாம், நான் திமிரு பிடிச்சவன் தான், தலைக்கனம் பிடிச்சவன் தான்! அதுக்கு இப்ப என்ன? ஆனா நான் எப்படிப்பட்டவன்னு என்னோட ரசிகர்களுக்கு தெரியும். எனக்கு அவங்களோட அன்பு போதும்’’ இவ்வாறு சிம்பு தனது பல சொந்த விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்!

#Simbu #STR #OpenPannaa #top10cinema #Silambarasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;