விஜய்சேதுபதி, ஆர்யா படங்களுடன் களமிறங்கும் த்ரிஷா படம்!

விஜய்சேதுபதியின் ‘ஜுங்கா’, ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களுடன் ரிலீஸாகும் த்ரிஷாவின் ‘மோகினி’

செய்திகள் 16-Jul-2018 11:20 AM IST VRC கருத்துக்கள்

த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நேரடித் தமிழ் படம் ‘கொடி’. இந்த படம் 2016, அக்டோபர் மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படம் வெளியானது. இந்த படங்களை தொடந்து ‘மோகினி’, ’சதுரங்கவேட்டை-2’ ‘கர்ஜனை’ 96, ‘பரமபதவிளையாட்டு’ ஆகிய படங்களில் நடித்து வந்தார் த்ரிஷா. இந்த படங்களில் ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘மோகினி’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயராகி வந்தது. இப்போது ‘மோகினி’யை வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதே நாளில் விஜய்சேதுபதியின் ‘ஜுங்கா’, ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களும் வெளியாகவிருப்பதால் இம்மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ’பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள ‘மோகினி’ படத்தில் த்ரிஷாவுடன் ஜாக்கி பகானி, பூர்ணிமா பாக்யராஜ், சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் மெர்ச்லின் இசை அமைத்துள்ளார். ‘கொடி’ வெளியாகி ஒன்றரை ஆண்டு இடைவெளிக்கு பிறகு த்ரிஷா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் ரக படமான மோகினி வெளியாகிறது.

#Trisha #Mohini #VijaySethupathi #Junga #Arya #Ghajinikanth #Sayyesha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;