டபுள் ரோலில் மிரட்ட வரும் த்ரிஷா!

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா டபுள் ரோலில் நடித்துள்ள மோகினி 27-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது!

செய்திகள் 23-Jul-2018 2:29 PM IST VRC கருத்துக்கள்

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் ‘மோகினி’. ஆர். மாதேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, கதையின் நாயகியாக, டைட்டில் ரோலில் நடித்துள்ளார். வருகிற 27-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் மாதேஷ் படம் குறித்து பேசும்து,

‘‘இந்த படத்தை மிகப் பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் த்ரிஷா ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில்,ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இது ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன் காட்சிகள் இருக்கும். படத்தில் ‘எபி ஜெனெடிக்ஸ்’ என்ற கான்செப்ட் உள்ளது. ‘DNA ‘ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் VFX காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. படத்தில் கேரளாவில் உள்ள சோட்டானிக்கர அம்மன் கோவிலில் நாங்கள் கண்ட சில உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளோம்’’ என்றார்!

‘மோகினி’ குறித்து த்ரிஷா பேசும்போது, ‘‘ நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான்! தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். ‘மோகினி’ படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. ‘மோகினி’ அனைவரும் பாரக்கக் கூடிய படமாக அமைந்துள்ளது’’ என்றார்!

லண்டன், பாங்காங் ஆகிய இடங்களில் படமாகியுள்ள ‘மோகினி’யின் ஒளிப்பதிவை R.B.குருதேவ் கவனித்துள்ளார். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘மோகினி’ ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தாரக்ள்.

#Trisha #Mohini #MohiniPressMeet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;