ஒரே நாளில் ‘டபுள் ட்ரீட்’ தரவிருக்கும் சமந்தா!

விநாயக சதுர்த்திக்கு சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’, ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிறது!

செய்திகள் 23-Jul-2018 4:04 PM IST VRC கருத்துக்கள்

பொன்ராம் இயகக்த்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்துள்ள ‘சீமராஜா’ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கிறது. சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’ செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் பவன்குமார் இயக்கத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கும் ‘U-TURN’ படமும் செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘U-TURN’ படமே அதே பெயரில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் நேற்று (22-7-18) வெளியிட்டனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, ‘தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‘யு-டர்ன்’ செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகும்’ என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சமந்தாவின் ‘சீமராஜா’, ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு முன் சமந்தா நடித்த ‘இரும்புத்திரை’ மற்றும் ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்கள் மே-11-ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகின! அந்த படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன! அதைப் போல ‘சீமராஜா’, ‘யு-டர்ன்’ ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியாகி அவையும் வெற்றிப் படங்களாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் சமந்தா!

#Samantha #Seemaraja #UTurn

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓ! பேபி Teaser


;