‘இந்தியன்-2’ படப்பிடிப்பு எப்போது?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ‘இந்தியன்-2’ பட ஷூட்டிங் குறித்த தகவலை வெளியிட்ட கமல்ஹாசன்!

செய்திகள் 25-Jul-2018 12:17 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. சில நாட்கள் படப்பிடிப்புடன் நின்றுபோன கமல்ஹாசனின் மற்றொரு படமான ‘சபாஷ் நாயுடு’வின் மீதமுள்ள படப்பிடிப்பு வேலைகள் எப்போது துவங்கும் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தான் அடுத்து நடிக்க இருக்கும் ‘இந்தியன்-2’ குறித்து பேசியிருக்கிறார் கமல்ஹாசன்! தான் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ‘இந்தியன்-2’ குறித்து கமல்ஹாசன் பேசும்போது, ‘பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் முடிவடைந்து விடும் என்றும் இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் ‘இந்தியன்-2’வின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும்’ என்றும் கூறியுள்ளார். ‘இந்தியன்-2’ படத்தை இயக்கும் ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார். ‘2.0’ நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருப்பதால் இந்த பட வேலைகளை ஷங்கர் விரைவில் முடித்து விடுவார் என்றும் அதன் பிறகு ‘இந்தியன்-2’வில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

#Indian2 #KamalHaasan #Shankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கழுகு 2 - டீஸர்


;