‘சர்காரி’ல் விவேக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம்!

விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் அனைத்து பாடல்களையும் விவேக் எழுதுகிறார்!

செய்திகள் 26-Jul-2018 11:57 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய பாடலாசிரியர்களில் விவேக்கும் குறிப்பிடத்தக்கவர். தொடர்ந்து நிறைய படங்களுக்கு பாடல்கள் எழுதி வரும் விவேக் முதன் முதலாக பாடல் எழுதிய படம் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’. இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகாவின் ‘36 வயதினிலே’, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’, ரஜினியின் ‘கபாலி’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘இறைவி’ உட்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய விவேக் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விஜயின் ‘மெரச்ல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்…’ என்று துவங்கும் பாடலை எழுதியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த இந்த பாடல் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தது. இந்த பாடலை தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்திற்கான அனைத்து பாடல்கள் எழுதும் வாய்ப்பும் விவேக்கிற்கு கிடைத்துள்ளது. ‘மெர்சல்’ படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே ‘சர்கார்’ படத்திற்கும் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள் சூழ்நிலையில் ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஒரே படலாசிரியரிடம் எழுத ஒப்படைப்பது அபூர்வமான விஷயம். ஆனால் விஜயின் ‘சர்கார்’ படம் மூலம் விவேக்கிற்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

#Sarkar #Vijay #Vivek #ARRahman #ARMurugadoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;