கிருஷ்ணா, பிந்துமாதவி நடிக்கும் படம் பற்றிய புதிய தகவல்!

கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடிக்கும் ‘கழுகு-2’வின் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

செய்திகள் 26-Jul-2018 2:39 PM IST VRC கருத்துக்கள்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்துமாதவி நடித்து 2012-ல் வெளியான படம் ‘கழுகு’. இரண்டாம்பாக படங்கள் வரிசையில் ‘கழுகு’வின் இரண்டாம் பாகமும் ‘கழுகு-2’ என்ற பெயரில் இப்போது உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய சத்ய சிவாவே இரண்டாம் பாகத்தையும் இயக்க, முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்துமாதவியே இரண்டாம பாகத்திலும் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து வசனக் காட்சிகளின் படப்பிடிப்பையும் 28 நாட்களில் முடித்துக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த (ஆகஸ்ட்) மாதம் கடைசி வாரத்தில் துவங்கவிருக்கிறது. பாடல் காட்சிகளின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த பிறகு ‘கழுகு-2’ படத்தை அக்டோபர் முதல் வாரம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

#Kazhugu2 #Krishna #BinduMadavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;